News February 25, 2026
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இரவு நேர காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று (பிப்ரவரி 24) இரவு முதல் இன்று காலை வரை பணியில் உள்ள அதிகாரிகளின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவசர காலங்களில் பொதுமக்கள் அந்தந்த பகுதி ரோந்து அதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
Similar News
News February 25, 2026
நாமக்கல்: இனி உங்க Whatsapp-ல் ஆதார் அட்டை!

நாமக்கல் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <
News February 25, 2026
நாமக்கல்: ரத்த வெள்ளத்தில் மூதாட்டி சடலம் மீட்பு

திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் ரத்தினம்மாள் (87). அப்பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை கதவு வெளிப்புறமாக பூட்டி இருப்பதை பார்த்த உறவினர்கள் கதவை உடைத்து பார்த்த போது கட்டிலுக்கு அடியில் ரத்தினம்மாள் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்தார். அவரது கழுத்து பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து திருச்செங்கோடு போலீசார் விசாரனை நடத்துகின்றனர்.
News February 25, 2026
நள்ளிரவில் வீடுகளின் கதவுகளை தட்டிய நபர் கைது

பள்ளிபாளையம் ஒன்றியம், ஆலம்பாளையம் டீச்சர்ஸ் காலனி பகுதியில் நேற்று நள்ளிரவில் வீடுகளின் கதவுகளை தட்டி மர்ம நபர் தொல்லை கொடுப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து எஸ்ஐ ரஞ்சித்குமார் விசாரணை நடத்தி, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (38) என்ற வாலிபரை கைது செய்தார். விசாரணையில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிந்ததையடுத்து, சென்னையில் உள்ள அவரது அண்ணனை வரவழைத்து ஒப்படைத்தனர்.


