News January 3, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (02/01/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – யுவராஜன் (9894177823), ராசிபுரம் – அம்பிகா (9498106258), திருச்செங்கோடு – தவமணி (9443736199), வேலூர் – ஷாஜகான் (9498167357) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
Similar News
News December 26, 2025
பள்ளிப்பாளையத்தில் வசமாக சிக்கிய இருவர்!

பள்ளிப்பாளையம் டி.எஸ்.பி., கவுதம் தலைமையில், வெப்படை போலீசார் நேற்று அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, பச்சாம்பாளையம் பகுதியில் உள்ள பேக்கரியில் தடை செய்யப்பட்ட புகை யிலைகளை விற்பனை செய்து கொண்டிருந்த குமார் (49), மற்றும் வெங்கடாசலம் (46) ஆகிய இரண்டு பேரை வெப்படை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து புகை யிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
News December 26, 2025
மல்லசமுத்திரம் அருகே விபத்து! VIDEO

சின்னதம்பிபாளையம் அருகே நேற்று (டிச.25) டெம்போ ஒன்று திடீரென கட்டுபாட்டை இழந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டிரைவர் இல்பான் லேசான காயங்களுடன் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். டெம்போவில் பயணம் செய்த 8 பேர் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயங்களும் இல்லாமல் உயிர்தப்பினர். இது குறித்து மல்லசமுத்திரம் எஸ்ஐ கவி பிரியா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
News December 25, 2025
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் நலன் கருதி, ‘எரிவாயு நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம்’ வரும் டிச. 29., அன்று பிற்பகல் 3 மணி அளவில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர் நாள் கூட்டரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் தகவல். SHARE IT


