News October 24, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (24.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு தங்கள் உட்கோட்ட அதிகாரியை, வழங்கப்பட்டுள்ள தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 என்ற எண்ணை டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News October 25, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை!

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் (NECC) நாமக்கல் கிளை கூட்டம் இன்று (அக். 24) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.25 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (அக். 25) முதல் முட்டையின் விலை ரூ.5.25 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
News October 25, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.24 நாமக்கல்-( தேசிங்கன் – 8668105073) ,வேலூர் -(ரவி – 9498168482), ராசிபுரம் -(கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் -(செல்வராஜு – 9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News October 25, 2025
நவ. 4-இல் நாமக்கல்லில் நயினார் நாகேந்திரன் பிரச்சாரம்

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் நவ. 4-ஆம் தேதி தமிழக பாஜக தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான நயினாா் நாகேந்திரன் பங்கேற்கும், ‘தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’ என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிலையில், மாநில பாஜக தலைவர் வருகையொட்டி, அதற்கான முன்னேற்பாடு பணிகளில் நாமக்கல் மாவட்ட பாஜக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


