News December 24, 2025
நாமக்கல்: இனி வங்கியில் வரிசைல நிக்காதீங்க!

வங்கி வாடிக்கையாளர்கள் இனி தங்களின் கணக்கு இருப்பு (Balance), மினி ஸ்டேட்மெண்ட் மற்றும் கடன் விவரங்களை அறிய வங்கிக்கு நேரில் செல்லத் தேவையில்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களைச் சேமித்து, ‘Hi’ என்று வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பினால் போதும்
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.
Similar News
News December 26, 2025
மல்லசமுத்திரம் அருகே விபத்து! VIDEO

சின்னதம்பிபாளையம் அருகே நேற்று (டிச.25) டெம்போ ஒன்று திடீரென கட்டுபாட்டை இழந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டிரைவர் இல்பான் லேசான காயங்களுடன் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். டெம்போவில் பயணம் செய்த 8 பேர் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயங்களும் இல்லாமல் உயிர்தப்பினர். இது குறித்து மல்லசமுத்திரம் எஸ்ஐ கவி பிரியா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
News December 25, 2025
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் நலன் கருதி, ‘எரிவாயு நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம்’ வரும் டிச. 29., அன்று பிற்பகல் 3 மணி அளவில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர் நாள் கூட்டரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் தகவல். SHARE IT
News December 25, 2025
நாமக்கல்லில் உச்சம் தான்! மாற்றமே கிடையாது!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 6.40- ஆக நீடித்து வந்தது. இந்த நிலையில் இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை மாற்றம் இன்றி ரூ. 6.40- ஆகவே நீடிக்கின்றது. முட்டை விலை உச்ச நிலையில் நீடிப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


