News August 30, 2025
நாமக்கல்: ஆதார் கார்டில் ADDRESS மாற்றமா..?

நாமக்கல்: ஆதார் கார்டில் இனி நீங்களே முகவரியை அப்டேட் செய்யலாம்.
▶️முதலில் இங்கே <
▶️அப்டேட் பகுதிக்குச் சென்று ‘ADDRESS UPDATE’ ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.
▶️அதில், முகவரி இடத்தில் உங்களது புதிய முகவரியை பதிவிடவும்.
▶️முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்.
▶️பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம்.
Similar News
News August 30, 2025
கடன் தீர்க்கும் அணியாபுரம் காலபைரவர்!

நாமக்கல் அடுத்த அணியாபுரத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் கோயில் அமைந்துள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் கால பைரவரை வணங்கினால், கடன் பிரச்சனைகள் நீங்குமாம். அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது நம்பிக்கை. இதை, கடன் பிரச்சனையில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News August 30, 2025
தங்க கவச அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்!

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில், ஆவணி மாத சனிக்கிழமையையொட்டி இன்று காலை 10:30 மணியளவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆஞ்சநேயருக்குப் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
News August 30, 2025
நாமக்கல்: டிகிரி போதும்.. தமிழக அரசில் வேலை!

நாமக்கல் மக்களே, தமிழ்நாடு அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் Assistant மற்றும் Data Entry Operator பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருந்தால் போதும். முதுகலைப் பட்டம் இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். மாதம் ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <