News June 14, 2024

நாமக்கல் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம் வரும் 15.06.2024-ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நாமக்கல், இராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இம்முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News March 2, 2026

அறிவித்தார் நாமக்கல் ஆட்சியர்!

image

நாமக்கல் மாவட்டத்தில் ‘தாயுமானவர் திட்டத்தின்’ கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, இன்று (2.3.26) மற்றும் (3.3.2026) ஆகிய நாட்களில் அத்தியாவசியப் பொருட்கள் இல்லங்களுக்கே வந்து வழங்கப்பட உள்ளன. இந்த அரிய வாய்ப்பினை தகுதியுள்ள பயனாளிகள் அனைவரும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

News March 2, 2026

நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

lநாமக்கல் மாவட்டத்தில் நேற்று (01.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 1, 2026

நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று மார்ச். 01 நாமக்கல்-(பாலசந்தர் – 9498169138),வேலூர் -(ரவி – 9498168482), ராசிபுரம் -(கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் -(கார்த்திகேயன் – 9498168983) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!