News October 10, 2024
நாமக்கல் ஆட்சியர் புகார் எண்கள் அறிவிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காலங்களில் தற்காலிகமாக உணவு கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்கள், வீடுகள் தயாரிக்கப்படும் இனிப்பு கார வகைகளுக்கு உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின்படி உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்று விற்பனை செய்ய வேண்டும். இது பற்றி பொதுமக்கள் புகார் தெரிவிக்க 9444042322 என்ற எண்ணை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 20, 2024
விவசாய நிலத்தில் வட்டாட்சியர் ஆய்வு
பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம் அக்ரஹாரம் ஊராட்சி ஓடக்காடு பகுதியில், இயங்கும் சாயப் பட்டறைகளின் கழிவுகள் நெல் வயல்களில் புகுந்த விவகாரம் தொடர்பான புகாரின் பேரில் குமாரபாளையம் தாசில்தார் சிவக்குமார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் இது குறித்து விவசாய நிலத்தின் உரிமையாளரிடமும் விசாரணை மேற்கொண்டார்.
News November 20, 2024
நாமக்கல்லில் 25ஆம் தேதி கடையடைப்பு
நாமக்கல் பரமத்தி சாலையில் அமைந்துள்ள வணிகர் சங்க அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாமக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள வணிகர்கள் கலந்து கொண்டனர். இதில் முக்கிய தீர்மானம் நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்கு மீண்டும் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என வலியுறுத்தி 25ஆம் தேதி நாமக்கல் மாநகராட்சி முழுவதும் கடைகளை அடைத்து போராட்டம் செய்வதாக முடிவு செய்தனர்.
News November 20, 2024
நாமக்கல்லில் துணை மேயர் அலுவலகம் திறப்பு
நாமக்கல் – திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ளது நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று துணை மேயர் பூபதிக்கு, மாநகராட்சி அலுவலகத்தில் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது. இதனை எம்பி ராஜேஷ்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் மேயர் மற்றும் திமுக உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.