News January 10, 2025

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அதிகாலை தரிசனம்

image

நாமக்கல் நகர மையத்தில் நாமகிரி தாயாரையும் நரசிம்ம பெருமாளையும் வணங்கி நின்றவாறு ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார். மார்கழி 25ஆம் தேதி ஏகாதேசி எனும் சொர்க்கவாசல் திறப்பு நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் இன்று அதிகாலையில் நடைபெற்றது. அங்கு தரிசனம் முடித்த பக்தர்கள் நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News

News January 30, 2026

நாமக்கல்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (இதை அதிகம் ஷேர் பண்ணுங்க)

News January 30, 2026

நாமக்கல்லில் குறைந்த விலையில் வாகனம் வாங்கனுமா?

image

நாமக்கல் மாவட்ட காவல்துறையால் பயன் படுத்தப்பட்ட 7 நான்கு சக்கர வாகனங்கள் பிப்ரவரி 10-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்படுகின்றன. ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் அன்று காலை 9:45 மணிக்குள் ரூ.5,000 முன்பணம் செலுத்த வேண்டும். முன்பணம் செலுத்தியவர்கள் மட்டுமே ஏலத்தில் அனுமதிக்கப்படுவர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். SHARE IT

News January 30, 2026

அறிவித்தார் நாமக்கல் ஆட்சியர்!

image

நாமக்கல் மாவட்டத்தில் முன்மாதிரி திருநங்கையர் விருது பெற, தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். இவ்விருது பெற தகுதியான திருநங்கைகள், அரசின் இணையதளத்தில் மட்டும் வரும் பிப். 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இவ்விருது தொடர்பான விபரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!