News May 27, 2024

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அலங்காரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இன்று ஆஞ்சநேயர் பகவானுக்கு தங்க கவசங்களால் அலங்கரிக்கப்பட்டு ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதனைக் காண ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயர் அருள் பெற்று செல்கின்றனர். மேலும் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்படுகின்றன.

Similar News

News October 29, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (29.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர காலங்களில் பொதுமக்கள் தங்கள் உட்கோட்ட அதிகாரியை, வழங்கப்பட்டுள்ள தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது ‘100’ என்ற எண்ணை டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் பொதுமக்களின் வசதிக்காக வழங்கப்பட்டுள்ளது.

News October 29, 2025

நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரம்: நீதிமன்றம் உத்தரவு!

image

நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பான பொதுநல வழக்கில், தற்போது வரை நடைபெற்ற விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், மனுதாரருக்கு வழக்கின் முதல் தகவல் அறிக்கையின் (FIR) நகலை வழங்கவும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

News October 29, 2025

நாமக்கல் ரயில் பயணிகளுக்கு முக்கிய செய்தி

image

நாமக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக தினசரி இயங்கும் 17235 பெங்களூரூ – நாகர்கோவில் விரைவு ரயில் 29.10.2025 இன்றும், 17236 நாகர்கோவில் – பெங்களூரூ ரயில் 30.10.2025 நாளையும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே மக்கள் தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!