News September 2, 2024

நாமக்கல் அருகே பள்ளியில் பரபரப்பு

image

நாமக்கல் மாவட்டம் எருமபட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் அமைந்துள்ளது. அங்கு காலை உணவு திட்ட சமையலறை கூடத்தில் அதே பள்ளியில் ஆசிரியர்கள் அறை முன்பும் உள்ள சுவற்றில் சமூக விரோதிகள் கெட்ட வார்த்தையும் பாலியல் உணர்வை தூண்டும் வகையிலான படங்களை வரைந்தும் காலை உணவு கூட அறையின் பூட்டில் மலத்தை அப்பியும் உள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக நிர்வாகி செந்தில் பாரதி கோரிக்கை விடுத்தார்.

Similar News

News November 14, 2025

நாமக்கல்: 11,364 பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத உள்ளனர்!

image

நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நாளை நவ.15ஆம் தேதி முதல் தாள் நடைபெற உள்ளது. இதில் 1,708 நபர்களும் 16ஆம் தேதி இரண்டாவது தாள் நடைபெற உள்ளது. இதில் 9,656 நபர்கள் என மொத்தம் இரண்டு நாட்கள் நடைபெறும் தேர்வில் 11,364 தேர்வர்கள் பங்கேற்று தேர்வு எழுத உள்ளனர் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News November 14, 2025

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு!

image

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் இன்று நவம்பர்-14ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் குழு கூட்டத்தில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.5.90 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று முட்டையின் விலை ரூ.5.85 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை தேவை அதிகரித்ததன் காரணமாகவே விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது.

News November 14, 2025

நாமக்கல் நான்கு சக்கர வாகன காவலர் விபரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் நவம்பர்-14ஆம் தேதி இரவு 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நாமக்கல் – தங்கராஜ் (9498170895), வேலூர்- சுகுமாரன் (8754002021), ராசிபுரம் – கோவிந்தசாமி (9498169110), திருச்செங்கோடு – பெருமாள் (9498169222), திம்மநாயக்கன்பட்டி – ரவி (9498168665), குமாரபாளையம் – ஆகியோர் இரவு ரோந்து பணியில் உள்ளனர்.

error: Content is protected !!