News December 28, 2025
நாமக்கல் அருகே தீ விபத்து: இளைஞர் பலி!

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள எரையம்பட்டி, பொம்மம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வீரம்மாள். இவர் வீட்டில் கடந்த 23-ஆம் தேதி விறகு அடுப்பில் சமையல் செய்தபோது அருகில் அமர்ந்து இருந்த பேரன் சிவலிங்கத்தின்(23) ஆடை தீப்பற்றி எரிந்ததில் அவர் பலத்த தீக்காயமடைந்து வெள்ளிக்கிழமை இரவு இறந்தார். இதுகுறித்து புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 30, 2025
திருச்செங்கோடு அருகே விபத்து!

வையப்பமலை எச்பி பெட்ரோல் பங்க் எதிரில் நேற்று (டிச.29) மதியம் 2 மணியளவில் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்தில் மொரங்கம் பகுதியை சேர்ந்த குப்புசாமி (57) பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் லேசான காய்களுடன் திருச்செங்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகிறார்கள்.
News December 30, 2025
நாமக்கல்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று டிச.29 முதல் இன்று காலை வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.