News April 14, 2024

நாமக்கல் அருகே திடீர் தீ விபத்தால் பரபரப்பு

image

பள்ளிபாளையம் அடுத்துள்ள ஈக்காட்டூர் என்ற பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான தகர சீட்டு பொருந்திய கூரை வீடு எதிர்பாராத விதமாக இன்று மாலை தீ விபத்துக்குள்ளானது. இதனை அடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர். தீ விபத்துக்கான காரணங்கள் தெரிய வராத நிலையில் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News December 27, 2025

நாமக்கல் வாக்காளர்களே சூப்பர் UPDATE!

image

நாமக்கல் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம்! அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

News December 27, 2025

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வருகிற டிசம்பர் 29ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 3 மணி அளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் எரிவாயு நிறுவன அதிகாரிகள் முகவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளார்கள் பயனாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை கூறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 27, 2025

நாமக்கல்: ஜல்லிக்கட்டு நடத்த 5 விண்ணப்பங்கள்

image

நாமக்கல் மாவட்டத்தில் 2026-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த இதுவரை 5 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்த விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டு, அரசின் பாதுகாப்பு விதிமுறைகளின்படி அனுமதி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!