News December 29, 2025
நாமக்கல் அருகே சோகம்: தம்பதி விபரீத முடிவு!

நல்லுார் அருகே கள்ளிபாளையத்தை சேர்ந்த தம்பதி பச்சமுத்து(85), தங்கம்மாள்(82). இவர்கள் தோட்டத்தில் வசித்து வந்தனர். இவர்களது மகன் வெற்றிவேல், சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். மகன் இறப்புக்கு பின், உறவினர்கள் யாரும் இவர்களை பராமரிக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து இறந்து கிடப்பது தெரியவந்தது. நல்லார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 30, 2025
நாமக்கல்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)
News December 30, 2025
உழவர் நல சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

மானிய உதவியுடன் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் தொடங்க தோட்டக்கலை, வேளாண்மை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் பட்டயப்படிப்பு (ம) பட்டப்படிப்பு பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் புவனேஸ்வரி தெரிவித்துள்ளார். மேலும், இத்திட்டம் தொடர்பான விபரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குனரை தொடர்பு கொள்ளலாம்.
News December 30, 2025
திருச்செங்கோடு அருகே விபத்து!

வையப்பமலை எச்பி பெட்ரோல் பங்க் எதிரில் நேற்று (டிச.29) மதியம் 2 மணியளவில் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்தில் மொரங்கம் பகுதியை சேர்ந்த குப்புசாமி (57) பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் லேசான காய்களுடன் திருச்செங்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகிறார்கள்.


