News October 12, 2025
நாமக்கல் அருகே கிணற்றில் மிதந்த சடலம்!

நாமக்கல், எர்ணாபுரத்தை சேர்ந்தவர் மாரப்பன். முன்னாள் பஞ்., தலைவர். இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் 45 வயதுள்ள ஆண் சடலம் மிதந்தது. சம்பவ இடத்துக்கு நல்லிபாளையம் போலீசார் வந்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இது கொலையா? தற்கொலையா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News October 12, 2025
நாமக்கல்: டிகிரி போதும்.. ரயில்வே துறையில் வேலை!

நாமக்கல் மக்களே, இந்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள துறை கட்டுப்பாட்டாளர் (Section Controller) பணிக்கு 368 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 20 -33 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதியாக ஏதாவதொரு டிகிரி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் <
News October 12, 2025
நாமக்கல் மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

நாமக்கல் மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 12, 2025
நாமக்கல்: கறிக்கோழி கிலோவுக்கு ரூ.3 உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.92-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.3 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.95 ஆக அதிகரித்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை ரூ.5.05 காசுகளாகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.120 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.