News April 23, 2025
நாமக்கல்: :அரசு போக்குவரத்து கழக புகார் எண் அறிவிப்பு

அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என அரசுபோக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE!
Similar News
News July 7, 2025
10th தேர்ச்சி பெற்றால் உள்ளூரில் கிராம உதவியாளர் வேலை

தமிழகத்தில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 68 பணியிடங்கள் நிரப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதில் பணியாற்றுபவருக்கு 10 ஆண்டுகளுக்கு பின் கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4க்குள் விண்ணப்பிக்க வேண்டும். <<16974687>>தொடர்ச்சி<<>> (1\2)
News July 7, 2025
கிராம உதவியாளர்: விண்ணப்பிக்க தகுதி என்ன?

▶️விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
▶️கட்டாயம் தமிழ் பாடத்தைக் கொண்டு படித்திருக்க வேண்டும்.
▶️சைக்கிள்/ இரு சக்கர வாகனம் இயக்க தெரிந்திருக்க வேண்டும்
▶️எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
▶️மேலும் தகவலுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் / உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!
News July 7, 2025
நாமக்கல்: ரூ.5.00 இலட்சம் வரை மானியம் வழங்கும் திட்டம்

நாமக்கல்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் விவசாய நிலம் வாங்க நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தில் ரூ.5.00 இலட்சம் வரை மானியம் மற்றும் 100 % நிலங்களுக்கு முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை அணுகலாம் . ஷேர் பண்ணுங்க !