News November 1, 2024
நாமக்கல்: அரசு பள்ளி மாணவர்களுக்கு தங்கம்
என்சிசி மாணவர்களுக்கான ஆண்டு பயிற்சி முகாம், ஈரோடு 15வது பட்டாலியனின் கமாண்டிங் அலுவலர் கர்னல் அஜய் குட்டினோ தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு பள்ளி கல்லூரிகளை சேர்ந்த 360 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். முகாமில் பல்வேறு திறனாய்வு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி 18 மாணவர்கள் கலந்து கொண்டனர். துப்பாக்கி சுடுதலில் 8 மாணவர்கள் தங்க பதக்கம் வென்றனர்.
Similar News
News November 19, 2024
நாமக்கல் மாநகராட்சி நாளை சிறப்பு மருத்துவ முகாம்
நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மாநகராட்சி மூலம் பல்வேறு இடங்களில் தினமும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது அதன் தொடர்ந்து நாளை புதன்கிழமை காலையில் 9:30 மணிக்கு வார்டு எண்.1 பெரிய அய்யம்பாளையம் மற்றும் காலை 11:00 மணிக்கு வார்டு எண்.8 கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் நாளை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது.
News November 19, 2024
நாமக்கல் தலைப்பு செய்திகள்
1.நாமக்கல் மாவட்டத்தில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 107வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
2.ரேப்கோ வங்கியின் 56 வது நிறுவன நாள் கொண்டாட்டம்
3.டூவிலரில் இருந்து முதியவர் தூக்கி வீசப்படும் காட்சி வெளியீடு
4.முத்தங்யிகில் காட்சி தந்த நாமக்கல் ஆஞ்சநேயர்
5.நாமகிரியில் சேவல் சண்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது
News November 19, 2024
நாமக்கல்லில் இன்று முட்டை விலை நிலவரம்
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 19ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.40 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை அதனால் ஏற்பட்ட குளிர் பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும் விலையில் மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ5.40 என்ற விலையிலேயே நீடிக்கிறது.