News May 6, 2024

நாமக்கல் அரசு பள்ளி மாணவி சாதனை

image

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த செ.கோபிகா பிளஸ் தேர்வில் 569 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.அவருக்கு பள்ளி தலைமை ஆசிரியை சிவகாமி மற்றும் ஆசிரியைகள் பாராட்டி சால்வை அணிவித்தனர். தேர்ச்சி பெற்ற மாணவி பொறியியல் படிப்பில் பயில ஆர்வம் தெரிவித்துள்ளார்.

Similar News

News July 5, 2025

நாமக்கலில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

நாமக்கல்: மல்லசமுத்திரத்தில் உள்ள மகேந்திரா இன்ஜினியரிங் கல்லூரியில் இன்று (ஜூலை 5) மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 10ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை பங்கேற்கலாம். நேரடி நியமனம் நடைபெறும்.

News July 5, 2025

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு

image

பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டுக்கான காரீப் பருவ பயிா்களை காப்பீடு செய்து கொள்ளுமாறு விவசாயிகளுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி அறிவுறுத்துள்ளாா். இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், இ-அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் இணைத்த கட்டணத் தொகையை செலுத்தலாம்.

News July 5, 2025

கூட்டுறவு வங்கியில் ஹோம் லோன் பெறுவது எப்படி?

image

▶️நீங்கள் அரசு வேலையிலோ, அரசு சார்ந்த நிறுவனத்திலோ, அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனத்திலோ பணிபுரிபவராக இருத்தல் வேண்டும்.
▶️நிலையான வருவாய் ஈட்டும் தொழில் செய்பவராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்
▶️நீங்கள் சம்பளத்திற்கு வேலை பார்ப்பவராக இருந்தால் form 16 அல்லது சம்பள சான்றிதழ் அவசியம்.
உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள கூட்டுறவு வங்கியை அணுகி தெரிந்துகொள்ளுங்கள்.(SHARE IT)

error: Content is protected !!