News May 22, 2024
நாமக்கல்:விதை விற்பனை நிலையங்களில் இணை இயக்குநா் ஆய்வு

நாமக்கல் மாவட்ட விதை விற்பனை நிலையங்களில் சென்னை விதைகள் ஆய்வு இணை இயக்குநா் ரவி நேற்று ஆய்வு மேற்கொண்டாா். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள விதை விற்பனை இடங்களில் ஆய்வு மேற்கொண்டாா். தனியாா் விதை விற்பனையாளா்கள் விற்பனை செய்யும் விதைகளுக்கு உரிய கொள்முதல் பட்டியல் மற்றும் விற்பனைப் பட்டியல் பராமரிக்கப்படுகிறதா? என்பதை பாா்வையிட்டாா்.
Similar News
News October 29, 2025
நாமக்கல்லில் கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 535 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 540 காசுகளாக அதிகரித்து உள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.101-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.110-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை
News October 29, 2025
நாமக்கல்: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர், 1.கூட்டு பட்டா, 2.விற்பனை சான்றிதழ், 3.நில வரைபடம், 4.சொத்து வரி ரசீது, 5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம். இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 29, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு !

நாமக்கலில் இருந்து நாளை(அக்.30) காலை 11:32 மணிக்கு மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர், திருநெல்வேலி, நாங்குநேரி, வள்ளியூர், நாகர்கோவில் செல்லவும் இரவு 9:15 மணிக்கு மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, அம்பாசமுத்திரம், தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம், காயங்குளம், செங்கனூர், செங்கணசேரி, கோட்டயம் போன்ற பகுதிகளுக்கு செல்லவும் ரயில்களில் டிக்கெட்டுகள் உள்ளன. மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.


