News August 5, 2025

நாமக்கல்லுக்கு வந்தது ‘வந்தே பாரத்’ ரயில்!

image

நாமக்கல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதுபடி:

✓ மதுரையில் இருந்து பெங்களூர் செல்லும் வந்தேபாரத் ரயில் 20671 (செவ்வாய்க்கிழமை தவிர) நாமக்கல்லில் காலை 8.30 மணிக்கு வந்து செல்லும்.

✓ பெங்களூரில் இருந்து மதுரை செல்லும் வந்தேபாரத் ரயில் 20672 (செவ்வாய்க்கிழமை தவிர)நாமக்கல்லில் மாலை 5.25 மணிக்கு வந்து செல்லும்.(SHARE)

Similar News

News August 5, 2025

நாமக்கல்: கல்லூரி மாணவன் சாதனை

image

நாமக்கல்: பெரியார் பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது அண்மையில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்தத் தடகள போட்டியின் ஒரு பகுதியான நடைபோட்டியில் 20 கி.மீ பிரிவில் கலந்து கொண்ட, ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரி மாணவன் சேர்ந்த எம். ஸ்ரீராம் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.

News August 5, 2025

நாமக்கல்: ரேஷன் கார்டில் பிரச்னையா? உடனே Call

image

நாமக்கல் மக்களே.., உங்கள் ரேஷன் அட்டையில் பெயர் மாற்றம், நீக்கம், சேர்ப்பு, பிழை போன்ற பிரச்னைகளுக்கும், ரேஷன் பொருட்களில் தரமின்மை, புகார், சேவைகளில் மாற்றம் குறித்த புகார்களை தெரிவிப்பதற்கும், ஸ்மார்ட் கார்டு சேவை சார்ந்த தகவல்கள், மாற்றங்கள் அப்டேட் ஆகாது இருப்பது போன்ற ரேஷன் கார்டு சர்ந்த எவ்வித சேவைகளுக்கும் உதவி செய்ய 04428592828-ஐ அழைக்கலாம்.(SHARE)

News August 5, 2025

நாமக்கல்: குறைதீர் கூட்டத்தில் 441 மனுக்கள்!

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், இன்று (ஆகஸ்ட் 4) மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்திருந்த 441 பேர், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினர். இக்கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!