News May 6, 2024
நாமக்கல்லில் 60 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
நாமக்கல் மாவட்டத்தில் மார்ச் 2024 -ல் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வில் 197 பள்ளிகளை சார்ந்த 8, 413 மாணவர்களும், 8, 847 மாணவிகளும் என மொத்தம் 17, 260 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 16, 586 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவ்வாண்டு 60 பள்ளிகள் நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் அரசுப் பள்ளிகளில் 14 பள்ளிகள் நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
Similar News
News November 20, 2024
நாமக்கல் இரவு ரோந்து அலுவலர்களின் விவரம்
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – சுப்ரமணியம் (9498173585), திருச்செங்கோடு – முருகேசன் (9498133890), வேலூர் – ஷாஜகான் (9498167357) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
News November 20, 2024
விவசாய நிலத்தில் வட்டாட்சியர் ஆய்வு
பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம் அக்ரஹாரம் ஊராட்சி ஓடக்காடு பகுதியில், இயங்கும் சாயப் பட்டறைகளின் கழிவுகள் நெல் வயல்களில் புகுந்த விவகாரம் தொடர்பான புகாரின் பேரில் குமாரபாளையம் தாசில்தார் சிவக்குமார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் இது குறித்து விவசாய நிலத்தின் உரிமையாளரிடமும் விசாரணை மேற்கொண்டார்.
News November 20, 2024
நாமக்கல்லில் 25ஆம் தேதி கடையடைப்பு
நாமக்கல் பரமத்தி சாலையில் அமைந்துள்ள வணிகர் சங்க அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாமக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள வணிகர்கள் கலந்து கொண்டனர். இதில் முக்கிய தீர்மானம் நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்கு மீண்டும் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என வலியுறுத்தி 25ஆம் தேதி நாமக்கல் மாநகராட்சி முழுவதும் கடைகளை அடைத்து போராட்டம் செய்வதாக முடிவு செய்தனர்.