News November 29, 2025
நாமக்கல்லில் 39,000 பேருக்கு ஒட்டு இல்லையா?

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் இறந்தோர், முகவரியில் இல்லாதோர், இரட்டை வாக்குரிமை உடையோர் , வெளிமாநிலங்களில் உள்ளவர்களுக்கு விண்ணப்பம் வழங்கபடவில்லை என்ற வகையில் தொகுதிக்கு 5000 முதல் 8000 வாக்காளர்கள் நீக்கப்படலாம். கடந்த 25 ம்தேதி முதல் இதுவரை கணினியில் பதிவேற்றம் செய்த சுமார் 39 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் என தேர்தல் பிரிவு அதிகாரி கூறினார்.
Similar News
News December 3, 2025
நாமக்கல்லில் கையும் களவுமாக சிக்கிய நபர்!

நாமக்கல் வழியாக லாரியில் குட்கா கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, நேற்று போலீசார் நாமக்கல்–சேலம் சாலையில் திடீர் சோதனை நடத்தினர். துறையூர் நோக்கி சென்ற லாரியில் ஹான்ஸ், கூல்லிப், பான்மசாலா உள்ளிட்ட 270 கிலோ குட்கா ரூ.1.57 லட்சம் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டது. லாரி டிரைவர் முருகேசன்(49) கைது செய்யபட்டு, குட்கா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பதில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்: தொடர்ந்து உயரும் கறிக்கோழி விலை..!

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.108-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக் கோழி விலை கிலோ ரூ.110 ஆக அதிகரித்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை 610 காசுகளாகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.112 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.