News August 26, 2024
நாமக்கல்லில் 2,000 விபத்து வழக்குகள் பதிவு

நாமக்கல்லில் புதியதாக மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் மற்றும் திருச்செங்கோட்டில் கூடுதல் சார்பு நீதிமன்றம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் எஸ்பி ராஜேஸ்கண்ணன் பேசுகையில், “நாமக்கல் மாவட்டத்தில், கடந்த ஆண்டில் 2,000 விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் 500 பேர் வரை உயிரிழந்துள்ளனர். விபத்துக்களை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றார்.
Similar News
News November 4, 2025
நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு

நாமக்கல்லில் இன்று நவம்பர் 4ம் தேதி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது இதனால் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.45 காசுகளாக அதிகரித்தது. மழை குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகாரித்தது. இதன் விளைவாக உயர்வு என கூறப்படுகிறது
News November 4, 2025
நாமக்கல்: இலவச தையல் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண் ஆகியோர் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையல் பயிற்சி முடித்து சான்று பெற்றவர்களுக்கு இலவச தையல் எந்திரம் வழங்கப்படுகிறது. வருகிற நவ.25ஆம் தேதிக்குள் உதவி இயக்குனர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், நாமக்கல் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
News November 4, 2025
நாமக்கல்: ரேஷன் கடையில் கைரேகை பதியவில்லையா?

நாமக்கல் மக்களே, ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <


