News March 6, 2025
நாமக்கல்லில் 1500 ஆண்டுகள் பழமையான கோவில்!

தமிழகத்தில் ஆஞ்சநேயர் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில். 1500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் நாமக்கல் கோட்டைக்கு கீழே அமைந்துள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை மிகவும் பிரம்மாண்டமானது. பீடத்திலிருந்து 22 அடியும், பாதத்திலிருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ளது. இந்த ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. வெட்டவெளியில் மழையிலும், வெயிலிலும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
Similar News
News September 6, 2025
நாமக்கல்: கொட்டிக் கிடக்கும் சூப்பர் வேலைகள்!

நாமக்கல் மக்களே.., இந்த செப்.., மாதத்தில் மட்டும் நீங்கள் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டிய வேலை வாய்ப்புகள்:
▶️சீறுடை பணியாளர் தேர்வு (https://tnusrb.cr.2025.ucanapply.com/login)
▶️ஊராட்சி துறை வேலை(https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php)
▶️EB துறை வேலை(https://tnpsc.gov.in/)
▶️LIC வேலை(https://licindia.in/)
▶️கிராம வங்கியில் வேலை(https://www.ibps.in/)
News September 6, 2025
நாமக்கல்: ஊக்க தொகையுடன் அர்ச்சகர் பயிற்சி

நாமக்கலில் ஊக்க தொகை ரூ.10,000 பணத்துடன் கூடிய ஓராண்டு கால இலவச அர்ச்சகர் பயிற்சி நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சியானது நரசிம்ம சுவாமி கோயிலில் நடத்தப்படும் வைணவ ஆகமம் குறித்து இருக்கும். இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள், கோயில் செயல் அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
News September 6, 2025
வட்டார வளர்ச்சி அலுவலர் திடீர் மாயம் போலீசார் விசாரணை

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி பிரிவு) பிரபாகரன் நேற்று இரவு பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வழக்கமான பணிகளை முடித்துவிட்டு தனது காரில் நாமக்கல் நோக்கி சென்றவர் வீட்டிற்கு செல்லாத நிலையில் மாயமானார். இதனை அடுத்து பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் யசோதா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.