News October 25, 2025
நாமக்கல்லில் வேலை..ஆட்சியர் அழைப்பு!

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மத்திய/மாநில அரசுகளின் போட்டித்தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இம்மையத்தில் புதிய பயிற்றுநர்களுக்கான நேர்காணல் நடைபெறவுள்ளது. நாமக்கல்லை சேர்ந்த திறமைமிக்க நபர்கள் அக்.30ந் தேதிக்குள் சுயவிவரக் குறிப்புகளுடன் மையத்திற்கு நேரில் அணுகுமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.ஷேர் பண்ணுங்க
Similar News
News February 3, 2026
ப.வேலூர் அருகே சோகம்: வாலிபர் பலி!

கபிலர்மலை கருக்கம்பாளையத்தைச் சேர்ந்த மாணிக்கராஜ் (21). நண்பர்களுடன் விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அனைவரும் குளித்துவிட்டு வெளியே வந்த நிலையில், மாணிக்கராஜ் மட்டும் வராததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர் ஒரு மணி நேரம் போராடி அவரது சடலத்தை மீட்டனர். இதுகுறித்து ப.வேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 3, 2026
பள்ளிப்பாளையம் அருகே விபத்து: பெண் பலி

பள்ளிப்பாளையம் அருகே ஐந்துபனை பகுதியைச் சேர்ந்த விசாலாட்சி (59) என்ற கூலித்தொழிலாளி, நேற்று முன்தினம் இரவு சாலையில் நடந்து சென்றபோது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 3, 2026
அறிவித்தார் நாமக்கல் ஆட்சியர்!

நீர்நிலைகளின் காவலன் என்று அழைக்கப்படும் பனை மரங்கள் கைவினைப்பொருட்கள் தயாரிக்கவும், உணவுப்பொருட்களை தரக்கூடியதாகவும், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மீள் தன்மைக்கு உதவக் கூடியதாகவும், மண் வளம் மற்றும் நீர் சேமிப்பை அதிகரிக்கவும் உதவுகிறது எனவே பனை மரத்தை வெட்ட வேண்டுமானால் நாமக்கல் நிர்வாகத்தின் அனுமதி பெற வேண்டும் என ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.


