News November 7, 2025
நாமக்கல்லில் விபத்து.. ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்!

நாமக்கல் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை, சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி வந்து கொண்டிருந்த கார், ஓட்டுநரின் தூக்க கலக்கம் காரணமாக முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுதா என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் நால்வர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவரின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News November 7, 2025
நாமக்கல்: கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ. 6 சரிவு!

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.106-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன்விலையை கிலோவுக்கு ரூ.6 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.100 ஆக குறைந்து உள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.106-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
News November 7, 2025
நாமக்கல்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

நாமக்கல் மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். SHARE IT!
News November 7, 2025
நாமக்கல்: இளம் பெண்ணிடம் அத்துமீறிய முதியவர்!

நாமக்கல்: புதுச்சத்திரம், சர்க்கார் நாட்டாமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜரத்தினம் (56). இவரது மகள் ஸ்ரீவர்சினி (22) மாற்றுத்திறனாளி மற்றும் மன வளர்ச்சி குன்றியவர். இவர் வீட்டில் வீல் சேரில்தான் உள்ளார். அதே பகுதியை சேர்ந்த வெங்கடாஜலம் (60), ஸ்ரீவர்சினிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து ராஜரத்தினம் புகார்படி, புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து வெங்கடாஜலத்தை தேடி வருகின்றனர்.


