News March 20, 2024
நாமக்கல்லில் விநோதமான முறையில் வேட்பு மனுதாக்கல்

மக்களவை தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடுவதற்காக நாமக்கல் சேர்ந்த காந்தியவாதி ரமேஷ் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய முதல் நபராக வந்திருந்தார்.அவர் 25 ஆயிரம் ரூபாய்க்கு பத்து ரூபாய் நாணயங்களாக மாற்றி மூட்டையாக கட்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு கொண்டு வந்திருந்தார்.சோதனைக்கு பிறகு காந்தியவாதி ரமேஷை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்குள் போலீசார் அனுமதித்தனர்
Similar News
News April 4, 2025
நாமக்கல்: நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (ஏப்., 5ல்) காலை, 11:00 மணி முதல் 5:00 மணி வரை செயற்பொறியாளர், இயக்கமும் பராமரிப்பும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் மின் நுகர்வோர், மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். நாமக்கல் மாவட்ட மக்கள் பயன்பெற இதை SHARE செய்யுங்கள்!
News April 4, 2025
நாமக்கல்லில் வேலை! APPLY NOW

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 10 காலிபணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15,000 வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. இந்த <
News April 4, 2025
நாமக்கல்லில் முட்டை விலை 20 பைசா சரிவு

நாமக்கல் மண்டலத்தில், தொடர்ந்து உயர்ந்துவந்த முட்டை விலை, திடீரென 20 பைசா சரிவடைந்து ஒரு முட்டை விலை ரூ. 4.45 ஆக நிர்ணயிக்கப்பட்டதால், பண்ணையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நேற்று மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 20 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.45 ஆக நிர்ணயிக்கப்பட்டது.