News October 22, 2025
நாமக்கல்லில் ரூ.15.06 கோடிக்கு மது விற்பனை!

நாமக்கல் மாவட்டத்தில் இந்த தீபாவளியை ஒட்டி இரண்டு நாட்களில் ரூ.15.06 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளின் தீபாவளி விற்பனையை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி மதுபான விற்பனை புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நாமக்கல் மாவட்டத்திலும் அதன் தாக்கம் எதிரொலித்துள்ளது.
Similar News
News October 22, 2025
வேளாண் பயிர்களின் களை மேலாண்மை பயிற்சி!

நாமக்கல் லத்துவாடி அருகேயுள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாளை (அக்.23) காலை 10 மணி முதல் 4 மணி வரை வேளாண் பயிர்களின் களை மேலாண்மை பற்றிய இலவச சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. பயிற்சி வகுப்பு முனைவர் செ.அழகுதுரை தலைமையில் நடைபெறுகிறது. விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்கள் தொலைபேசி எண்களை 04286-266345, 99430 08802 தொடர்புகொண்டு முன்பதிவு செய்யுமாறு அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 22, 2025
கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை!

தமிழகத்தில் பருவ மழை தொடங்கியுள்ள காரணமாக பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் தமிழக அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளித்துள்ளது. இதனிடையே கொல்லிமலையில் பெய்து வரும் மழை காரணமாக ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க நாமக்கல் மாவட்ட வனத்துறை தடைவித்துள்ளது.
News October 22, 2025
நாமக்கல்: எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இன்று நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில், எஸ்.பி. விமலா தலைமையில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.