News November 23, 2025

நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை!

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று நவம்பர் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது இந்த குழு கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.6.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.

Similar News

News November 27, 2025

நாமக்கல்லில் 31,006 படிவங்கள் சமர்ப்பிப்பு!

image

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டத்தில் நியாய விலை கடைகளில் விற்பனையாளர்கள் மூலம் வாக்காளர்களிடமிருந்து 31,006 பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீட்டு படிவங்கள் பெறப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலரும் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருமான துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News November 27, 2025

நாமக்கல்: முட்டை விலை மாற்றமின்றி நீட்டிப்பு!

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.6.10- ஆக விற்பனையாகி வந்த நிலையில், இன்றைய தினம் (நவ.27) முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ.6.10- ஆகவே நீடிக்கின்றது. கடந்த ஒரு வாரமாக முட்டை கொள்முதல் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News November 27, 2025

நாமக்கல்: கணக்கீட்டு படிவத்தை சமர்ப்பிக்க கடைசி நாள்!

image

நாமக்கல்லை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் கணக்கீட்டு படிவத்தை வரும் டிச.04ந் தேதிக்குள் மாநகராட்சி, நகராட்சிகள் பேரூராட்சிகள் (ம) ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், அந்தந்த உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்கள், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், நியாய விலை கடைகளில் திரும்ப ஒப்படைக்குமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!