News October 7, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை !

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் நேற்று (அக்டோபர் 6) நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.05 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவிவரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (அக்டோபர் 7) முதல் முட்டையின் விலை ரூ.5.05 ஆகவே நீடிக்கும் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
Similar News
News October 28, 2025
நாமக்கல்: வேளாண் பட்டதாரிகளுக்கு மானியம்!

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைப்பதற்கு வேளாண் பட்டதாரிகள் (ம) பட்டயதாரர்களுக்கு ரூ.3 லட்சம் – ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படவுள்ளது. எனவே, சுயதொழில் தொடங்க நினைப்போர் முதலில் விரிவான திட்ட அறிக்கையுடன் வங்கியில் கடன் பெற்று, அதன் பிறகு https://www.tnagrisnet.tn.gov.in/ என்ற இணையதளத்தில் மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.
News October 28, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு

நாமக்கல் மாவட்டம் நாமக்கலில் இருந்து நாளை (புதன்) 29/10/2025 மற்றும் வரும் நாட்களில் காலை 8:30 மணிக்கு கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ செல்ல 20671 பெங்களூரூ வந்தே பாரத் ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளன! நாமக்கல் சுற்றுவட்டார பகுதி மக்கள் முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்! இந்த செய்தியினை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.
News October 28, 2025
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி இன்று 28.10.2025 வெளியிட்ட செய்திக் குறிப்பில், “வரும் 30.10.2025 அன்று எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் எரிவாயு உருளை பதிவு, விநியோகம் மற்றும் புகார் தொடர்பான கூட்டம் மாலை 3.30 மணியளவில் நடைபெற உள்ளது” என அறிக்கை வாயிலாக கூறியுள்ளார்.


