News November 21, 2024
நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கலில் இன்று 21ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.45 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை, குளிர், பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது. இந்த நிலையில் இன்று 5 காசுகள் உயர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.45 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது.
Similar News
News September 11, 2025
நாமக்கல்லில் இனி இது கட்டாயம்!

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாய்களை வளர்ப்பவர்கள், அதற்கான உரிமத்தை மாநகராட்சியில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என ஆணையாளர் சிவகுமார் தெரிவித்துள்ளார். வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழையும் இணைத்து, உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் பெறாமல், நாய்களை தெருவில் திரியவிடும் உரிமையாளர்களுக்கு ரூ.25,000 முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
News September 11, 2025
நாமக்கல் மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!

நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றித் திரிவதால், அவற்றை பிடிப்பதற்காக மாநகராட்சி சார்பில் தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சிலர் பணியாளர்களை நாய்களை பிடிக்க விடாமல் தடுத்து வருகின்றனர். இதையடுத்து, நாய்களை பிடிப்பவர்களைத் தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
News September 11, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேரங்களில் நான்கு சக்கர ரோந்து அதிகாரிகள் தினமும் நியமிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் இன்று செப்டம்பர்.10 நாமக்கல் – ராஜ்மோகன் (9442256423), வேலூர் – ரவி ( 9498168482), ராசிபுரம் – கோவிந்தசாமி ( 9498209252), பள்ளிபாளையம் – டேவிட் பாலு ( 9486540373), திம்மன்நாயக்கன்பட்டி – ரவி ( 9498168665), குமாரபாளையம் – செல்வராஜூ (9994497140) ஆகியோர் உள்ளனர்.