News January 22, 2026
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் நேற்று (ஜனவரி. 21) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.00 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், இன்று ( ஜனவரி. 22) முதல்முட்டையின் விலை ரூ.5.00 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
Similar News
News January 25, 2026
மோகனூர் அருகே பெண்ணுக்கு அரிவாள் வெட்டு சம்பவம்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே தகராறில் தனலட்சுமி என்ற பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். எஸ்பி விமலாவின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி உத்தரவின்படி சுரேஷ் தற்போது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். படுகாயமடைந்த தனலட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
News January 25, 2026
கொல்லிமலை அருகே பள்ளி மாணவன் பலி

கொல்லிமலை அரியூர் நாடு ஊராட்சி மேல்கலிங்கம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தம்பதி சிவப்பிரகாசம்-சரஸ்வதி. இவர்களது இளைய மகன் ஆகாஷ் (14) 9-ஆம் வகுப்பு மாணவன். இவன் மோட்டார் சைக்கிளில் தெம்பலம் கிராமம் நோக்கி சென்றபோது தனியார் பள்ளி வேன் மோதி விபத்துக்குள்ளானார். இதில் பலத்த காயமடைந்த அவர், சேலம் GH-ல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வாழவந்தி நாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 25, 2026
முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.05- ஆக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், நாமக்கல்லில் இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.10 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் முட்டை விலை 5 காசுகள் உயர்வடைந்த நிலையில், இன்றும் 5 காசுகள் உயர்வடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


