News January 15, 2026
நாமக்கல்லில் முட்டை விலை ரூ.5.60 ஆக நிர்ணயம்

நாமக்கல்லில் நேற்று (ஜன. 14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.60 என நிர்ணயிக்கப்பட்டது. குளிர்காலம் முடிந்து நுகர்வு சற்று குறைந்துள்ளதால் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முட்டை விலையில் மாற்றமின்றி இதே நிலை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 22, 2026
நாமக்கல்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
News January 22, 2026
நாமக்கல்: 8th போதும் அரசு டிரைவர் வேலை! APPLY NOW

நாமக்கல் மக்களே, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு<
News January 22, 2026
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 25ந் தேதி காலை 6 மணி அளவில் நாமக்கல் பூங்கா சாலையில் இருந்து விழிப்புணர்வு மரத்தான் தொடங்கி உழவர் சந்தை, லட்சுமி நரசிம்மர் கோவில், பழைய பேருந்து நிலையம் வழியாக மீண்டும் பூங்கா சாலை வரை நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல் 500 நபர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!


