News August 13, 2024
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 440 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே, முட்டை கொள்முதல் விலை 450 காசுகளாக அதிகரித்துள்ளது. மேலும், கறிக்கோழி கிலோ ரூ.85க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ரூ.5 உயர்வடைந்து ரூ.90 ஆக அதிகரித்துள்ளது.
Similar News
News March 10, 2026
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (09.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 9, 2026
நாமக்கல்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

நாமக்கல் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)
News March 9, 2026
நாமக்கல்: Spam Calls பிரச்சனையா?

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் வெறுப்பு அடைய வைக்கும் . நாமக்கல் மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை SAVE செய்து உடனே மற்றவருக்கு ஷேர் பண்ணுங்க.


