News March 29, 2024
நாமக்கல்லில் ‘மீறினால் பாயும்’

2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதியை முன்னிட்டு சமூக வலைதளங்களை பொறுப்பாக பயன்படுத்தி சரியான தகவல்களை பொது மக்களுக்கு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் வதந்தி மற்றும் தவறான தகவல்களை பதிவிடுவோர் மற்றும் அவற்றை பகிர்வோர் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுத்து வழக்கு பதிவு செய்யப்படும் என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News August 15, 2025
BREAKING:தமிழக அளவில் மாஸ் காட்டிய நாமக்கல்!

தமிழக அளவில் சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சிகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், அனைத்து வகையிலும் சிறந்த செயல்பாடுகளுக்காக, நாமக்கல் மாநகராட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்து, சிறந்த மாநகராட்சிக்கான விருதை வென்றது. சென்னையில் இன்று(ஆக.15) நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விருதை வழங்கினார்.நாமக்கல் மக்களே இதனை ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்
News August 15, 2025
ரூ.2.50 லட்சம் பரிசு: அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்

நாமக்கல் விவசாயிகளே மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் மாநில அளவில் சிறு தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள் மற்றும் கரும்பு பயிர்களில் அதிக உற்பத்தியை பெறும் முதல் 3 விவசாயிகளுக்கு ரூ.2.50 லட்சம் பரிசாக வழங்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொள்ளலாம் என நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.இதனை விவசாயிகளுக்கு ஷேர் பண்ணுங்க.
News August 14, 2025
நாமக்கல் நரசிம்ம சுவாமி கோவிலில் பொது விருந்து

நாமக்கல் விளையாட்டு மைதானத்தில் நாளை (ஆகஸ்ட் 15) சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. இதில், மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்த உள்ளார். இதன் தொடர்ச்சியாக அருள்மிகு நரசிம்ம சுவாமி கோவிலில் மதியம் 12.30 மணி அளவில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற உள்ளது. இதில் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.