News February 13, 2026
நாமக்கல்லில் மீண்டும் ஒத்திவைப்பு!

நாமக்கல் மாவட்டம் மங்களபுரம் – தாண்டகவுண்டன்பாளையத்தில் இன்று (பிப்.13) நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டி, தவிர்க்க முடியாத காரணங்களால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிப்.7-ம் தேதி நடைபெறவிருந்து மாற்றப்பட்ட நிலையில், இன்று பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தும் போட்டி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதற்கான மாற்றுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Similar News
News February 18, 2026
நாமக்கல்: பட்டாவில் பெயர் மாற்றுவது எப்படி?

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News February 18, 2026
நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்கள் வானம் தெளிவாக காணப்படும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்தவரையில் குறைந்தபட்சமாக 68 டிகிரியாகவும், அதிகபட்சமாக 93.2 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சமாக 30 சதவீதமாகவும், அதிகபட்சமாக 80 சதவீதமாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
News February 18, 2026
நாமக்கல்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<


