News December 30, 2025

நாமக்கல்லில் பாட்டிலுக்கு 10 ரூபாய்: கடும் எதிர்ப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் 186 டாஸ்மாக் கடைகள் செயல்படுகிறது. இதில் 744 தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். நாமக்கல் மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை முதல் அனைத்து டாஸ்மாக் 24 கடைகளிலும் காலி மதுப் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்

Similar News

News January 9, 2026

திரைபடத்தில் களம் இறங்கிய நாமக்கல் எம்பி!

image

திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமாா் கதாநாயகனாக நடிக்கும் ‘டெலிவரி பாய்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் நடித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறியதாவது: அரசியலுக்கு வருவதற்கு முன்பே சிறு, சிறு வேடங்களிலும் நடித்துள்ளேன். அந்த வகையில் டெலிவரி பாய் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க அழைப்பு வந்தது. அதனால் ஏற்றுக்கொண்டு நடித்தேன் என்றார்.

News January 9, 2026

நாமக்கல்லில் இனி அலைய வேண்டாம்!

image

நாமக்கல் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள்,மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். இதற்காகத் தமிழக அரசு 7845252525 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 9, 2026

நாமக்கல்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், நேற்று(ஜன.8) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.9) காலை 6 மணி வரை இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!