News April 27, 2025
நாமக்கல்லில் பாஜகவினர் கைது !

நாமக்கல்: சேத்தமங்களம் அருகே, காளப்பநாய்க்கன்பட்டி பஸ் ஸ்டாப்பில் பாஜக சார்பில் காஷ்மீர் தாக்குதலை கண்டித்து பேனர் வைக்கப்பட்டது. அந்த பேனரில் சில சர்ச்சைக்குறிய வாசகங்கள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரப்பினர். இந்நிலையில், அப்பகுதி போலீசார் அந்த பேனரை அகற்றி செந்தில் குமரன், இளங்குமரன் ஆகிய பாஜகவினரைக் கைது செய்தனர்.
Similar News
News April 27, 2025
நாமக்கல்லில் கறிக்கோழி விலையில் மாற்றம் இல்லை!

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த (ஏப்.25) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.8 உயர்த்தப்பட்டு ஒரு கிலோ ரூ.88 நிர்ணயிக்கப்பட்டது. இன்று (ஏப்-27) நடைபெற்ற கூட்டத்தில் கறிக்கோழி விலை மாற்றம் செய்யவில்லை. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
News April 27, 2025
நாமக்கல்லில் ரூ.45,000 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறையின் கீழ், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், காலியாக உள்ள குறைதீர்ப்பாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணிக்கு நாமக்கல்லைச் சேர்ந்தவர்கள் வரும் மே.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.45,000. விண்ணப்பங்களை பதிவிறக்க இந்த <
News April 27, 2025
நாமக்கல் மாவட்ட EB எண்கள்!

▶️செயற்பொறியாளர், நாமக்கல்: 9445852390
▶️செயற்பொறியாளர், பரமத்திவேலூர்: 9445852430
▶️செயற்பொறியாளர், ராசிபுரம்: 9445852420
▶️செயற்பொறியாளர், திருச்செங்கோடு: 9445852410
▶️செயற்பொறியாளர், சங்ககிரி: 9445852250