News October 3, 2025
நாமக்கல்லில் பரபரப்பு கைது: போலீஸ் அதிரடி

எருமப்பட்டி கைகாட்டியை சேர்ந்தவர் முகம்மது அப்துல் ரகுமான், 25. இவர் மீது பல்வேறு கஞ்சா வழக்குகள் உள்ள நிலையில் நாமக்கல் எஸ்.பி., விமலா, கூடுதல் எஸ்.பி., தனராசு ஆகியோர் முகம்மது அப்துல் ரகுமானை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி, நாமக்கல் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இந்நிலையில் ஆட்சியர் உத்தரவின் படி போலீசார் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.
Similar News
News October 3, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு !

நாமக்கலில் இருந்து இன்று(அக்.3 ) இரவு 10:50 PM மணிக்கு பங்காரபேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு, கெங்கேரி, மாண்டியா, மைசூர் போன்ற பகுதிகளுக்கு 06244 மைசூர் வந்தேபாரத் ரயிலிலும் நாளை(அக்.4) காலை 8:30 am மணிக்கு கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு போன்ற பகுதிகளுக்கு செல்ல 20671 பெங்களூரூ வந்தேபாரத் ரயிலிலும் டிக்கெட்கள் உள்ளன. மக்கள் பயன் படுத்தி கொள்ளலாம் . SHAREIT
News October 3, 2025
நாமக்கல்: நிலம் வாங்க ரூ.5 லட்சம் வேண்டுமா?

1.நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2.குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3.2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4.100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
5.newscheme.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்
6.மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHARE பண்ணுங்க!
News October 3, 2025
நாமக்கல் அருகே பயங்கர விபத்து மாணவர் பலி

ஜேடர்பாளையம் அருகே பாகம்பாளையத்தை சேர்ந்தவர் கோபால் (50). இவரது மகள் தீபக் (18). இவர் தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். நண்பருடன் டூவீலரில் சென்ற போது வடகரையாத்தூர் பகுதியை சேர்ந்த கதிரவன் (32) என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் மோதியதில் தீபக் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.