News May 12, 2024
நாமக்கல்லில் பக்தர்கள் தரிசனம்

உலக புகழ் பெற்ற நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று சித்திரை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு பின்னர் 1008 வடை மாலை சாத்திய பிறகு 11 மணி அளவில் பஞ்சாமிர்தம் தேன் பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை மகா தீபம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்ட மாநில பக்தர்கள் தரிசனம் பெற்றனர்.
Similar News
News August 29, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று ( ஆகஸ்ட். 28 ) நாமக்கல் – கோமதி (9498167680 ), ராசிபுரம் – அம்பிகா ( 9498106528), திருச்செங்கோடு – சங்கீதா ( 9498167212), வேலூர் – இந்திராணி ( 9498169033) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News August 28, 2025
நாமக்கல்லில் 89.96°F வெப்பம் பதிவு!

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும் இன்றைய தினம் அதிகபட்ச வெப்பநிலையாக 89.96° ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது. இதனால் சாலையோர வியாபாரிகளும், இருசக்கர வாகன ஓட்டிகளும், வேலைக்கு செல்வோரும் அவதியடைந்துள்ளனர்.
News August 28, 2025
நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக, ஒரு முட்டையின் விலை ரூ. 5.10 என நிர்ணயம் செய்யப்பட்டது. மழை மற்றும் குளிர் போன்ற காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. நேற்று முட்டையின் விலை ரூ.5.05 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.