News August 5, 2025
நாமக்கல்லில் நாளை முகாம் நடைபெறும் இடங்கள்!

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (06.08.2025) புதன்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்: நாமக்கல் என்.கொசவம்பட்டி என்.ஆர்.எல் திருமண மஹால், திருச்செங்கோடு ஆனங்கூர் சூரியம்பாளையம் செங்குந்தர் திருமண மண்டபம், காளப்பநாயக்கன்பட்டி துத்திக்குளம் கலைவாணி திருமண மண்டபம், நாமகிரிப்பேட்டை வட்டாரம் ஆயில்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News August 6, 2025
நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்

நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 3 நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், இன்று(ஆக.6) 10 மி.மீட்டரும், நாளை மறுநாள் (ஆக.8) 3மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (ஆக.7) மழைக்கு வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 95 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 73.4 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News August 6, 2025
நாமக்கல்: SBI வங்கி வேலை! APPLY NOW

நாமக்கல் மக்களே.., SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates(Customer Support and Sales) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆரம்ப கட்ட சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <
News August 6, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

பெங்களூரூ, நாமக்கல் வழியாக இயக்கப்பட்டு வரும் 07355/07356 ஹூப்ளி – ராமேஸ்வரம் – ஹூப்ளி சிறப்பு ரயில் சேவை வரும் ஆக.31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ரயில் 5ஆம் ஆண்டு பயணத்தை தொடங்கியுள்ளது. நாமக்கலில் இந்த ரயில்கள் புறப்படும் நேரம் சனிக்கிழமை இரவு 8:45 மணிக்கும், திங்கள் அதிகாலை 4:20 மணிக்கு 07356 ராமேஸ்வரம் ஹூப்ளி ரயில் செல்லும் என்பதால் மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.