News January 21, 2026
நாமக்கல்லில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

நாமக்கல்லில் நாளை(ஜன.22) மின் பராமரிப்பு பணி நடைபெறுகின்றது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை காளப்பநாயக்கன்பட்டி, காரவள்ளி, ராமநாதபுரம்புதுார், பேளுக்குறிச்சி, பள்ளம்பாறை, திருமலைப்பட்டி, கொல்லிமலை,துத்திக்குளம், வையப்பமலை, அவினாசிப்பட்டி, கருங்கல்பட்டி, பிள்ளாநத்தம், எலச்சிபாளையம், ராமாபுரம், பி.கே.பாளையம், வண்டிநத்தம், அத்திமரப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
Similar News
News January 23, 2026
நாமக்கல்லில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மாணாக்கர்களின் நலன் கருதி கனமழையின் காரணமாக கடந்த 22.10.2025 அன்று விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறை அளிக்கப்பட்ட நாளினை ஈடுசெய்யும் வகையில் நாளை 24.01.2026 (சனிக்கிழமை) அன்று அனைத்து வகை பள்ளிகளும் செயல்பட வேண்டுமென மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆணையிட்டுள்ளார்.
News January 23, 2026
நாமக்கல் அருகே மதுவால் ஒருவர் பலி!

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர், நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே, நெய்காரம்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் கிரஷரில் கல் உடைக்கும் வேலை செய்து வந்தார். இந்நிலையில், அதிகளவில் மது அருந்திய பழனிச்சாமி, அவர் தங்கியிருந்த வீட்டின் அருகிலிருந்த கல்குவாரியில் தவறிவிழுந்து உயிரிழந்தார். எலச்சிபாளையம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
News January 23, 2026
நாமக்கல்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <


