News September 9, 2025
நாமக்கல்லில் தவெக தலைவர் விஜய்!

தமிழக சட்டமன்ற தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் வரும் 13ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை தமிழகத்தில் பிரச்சாரம் செய்கிறார். இதில், வரும் டிசம்பர் 13 ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்து பிரச்சாரம் செய்ய உள்ளார். மேலும் பிரச்சார நிகழ்விற்கு தற்போது காவல்துறையிடம் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது.
Similar News
News March 6, 2026
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட 4 மையங்களில் தெருநாய்களுக்கான இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைகள் நடைபெறுவதாகவும். உள்ளாட்சிப் பணியாளர்கள் மூலம் பிடிக்கப்படும் நாய்களுக்கு அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு, ஐந்து நாள் கண்காணிப்பிற்குப் பின் மீண்டும் அதே இடங்களில் விடப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.
News March 6, 2026
நாமக்கல்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியீடு

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேர ரோந்து பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட இரவு ரோந்து அதிகாரியாகக் காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல், இராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளுக்கான ஆய்வாளர்கள் மற்றும் வாகன ரோந்து அதிகாரிகளின் பெயர்கள், அவர்களின் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
News March 5, 2026
நாமக்கல் மக்களே.. இனி அலைய வேண்டாம்!

ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த லிங்கில் மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!


