News May 31, 2024
நாமக்கல்லில் டாஸ்மாக் கடைகள் மூடல்

நாமக்கல் மாவட்டத்தில் வருகின்ற 4 ம் தேதி விவேகானந்தா கலை மற்றும் கல்லூரி வளாகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு என்னும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அன்று வாக்குகள் என்ன இருக்கின்றது. அதனால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மற்றும் வெளிநாட்டு மதுபான கடைகள், மதுபான பார்கள் ஆகியவை திறக்க கூடாது என நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News May 8, 2025
நாமக்கல் மாணவி அசத்தல்!

தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே.8) வெளியானது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற மாணவி கார்த்திகா, 598/600 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும், பள்ளி ஆசிரியர்களும் மாணவிக்கு தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
News May 8, 2025
மார்கழியில் மட்டுமே காட்சி தரும் மரகத லிங்கம்!

நாமக்கல்: திருச்செங்கோடு மலையின் மீது அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் அர்த்தநாரீஸ்வரரும், தாயார் பாகம்பிரியாளும் அருள்பாலித்து வருகிறார்கள். இங்கு மார்கழி மாதம் மட்டும் மரகத லிங்கம் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. மற்ற மாதங்களில் அதற்குப் பதிலாக வேறு ஒரு லிங்கம் வைத்து வழிபடுகிறார்கள். இந்த மரகத லிங்கத்தை தரிசனம் செய்ய காலை 5 மணிக்குள் கோவிலில் இருக்க வேண்டும். SHARE பண்ணுங்க!
News May 8, 2025
நாமக்கல்: 70 பள்ளிகள் 100% தேர்ச்சி

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் 195 பள்ளிகள் உள்ளது. அதில் 12 அரசு பள்ளிகள் உட்பட 70 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளில் 9343 பேரில் 8672 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை WAY2NEWSல் தொடர்ந்து பாருங்கள். (ஷேர் பண்ணுங்க)