News April 13, 2025

நாமக்கல்லில் கை வரிசை காட்டிய சர்வேயர் போலீஸ் பிடியில்!

image

திருச்செங்கோட்டைச் சேர்ந்த விஜயகுமாரி என்பவரது நிலத்தை அளவீடு செய்து கூட்டு பட்டாவில் இருந்து தனிப்பட்டாவாக மாற்றித் தருவதற்காக, சர்வேயர் பூபதி (36) என்பவர் 9 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து விஜயகுமாரி அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட போலீசார், லஞ்சம் வாங்க முயன்ற பூபதியை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Similar News

News April 14, 2025

நாமக்கல்: லாரியில் தவிடு ஏற்றும்போது நேர்ந்த விபரீதம்!

image

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பத்ரி மாத்தோ (45) நாமக்கல் காவேட்டிப்பட்டியில் உள்ள கோழித் தீவன ஆலையில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை, தவிடு மூட்டைகளை லாரியில் ஏற்றும்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் படுகாயமடைந்த அவர், உயிரிழந்தார்.இது குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 14, 2025

நாமக்கல்லில் இன்று மழைக்கு வாய்ப்பு!

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வரும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் இன்று மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று காலை 10 மணி வரை மாவட்டத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளியில் செல்லும் மக்கள் குடையுடன் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

News April 13, 2025

முட்டை கொள்முதல் விலையில் மாற்றமில்லை

image

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (13-04-2025) நிலவரப்படி முட்டை பண்ணை கொள்முதல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் ரூ.4.15 காசுகளாக நீடித்து வருகிறது. கடந்த (எப்ரல் 9) முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.15 ஆக நிர்ணயப்பட்டது. அதனைத் தொடர்ந்து நான்கு நாட்களாக முட்டை விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், அதே விலையில் நீடித்து வருகிறது.

error: Content is protected !!