News April 7, 2025
நாமக்கல்லில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.7 குறைவு!

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் இன்று (ஏப்.7) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.7 குறைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஒரு கிலோ கறிக்கோழியின் விலை ரூ.89 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
Similar News
News November 9, 2025
நாமக்கல்: WhatsApp மூலம் பணம் பறிபோகலாம்!

நாமக்கல் மக்களே, வங்கிகளின் அசல் லோகோவை பயன்படுத்தி ரூ.7,500 வெகுமதி தருவதாக கூறி, பலரது ‘வாட்ஸ் ஆப்’ எண்ணுக்கு ஒரு ‘லிங்க்’ வருவதாக புகார் எழுந்துள்ளது. அது மோசடி செய்யும் நோக்குடன் சைபர் குற்றவாளிகளால் அனுப்பப்படும் ‘லிங்க்’ ஆகும். விவரம் தெரியாத பலரும் இதனால் ஏமாற்றப்படலாம். அந்த லிங்கை கிளிக் செய்தல் பணம் பறிபோகலாம். எனவே, உஷாரா இருங்க. இதுபோன்ற லிங்கை நம்பி ஏமாற வேண்டாம். SHARE பண்ணுங்க!
News November 9, 2025
நாமக்கல்: இன்றைய கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.60 காசுகளாக இருந்து வந்தநிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில், அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே, முட்டை கொள்முதல் விலை ரூ.5.65 காசுகளாக அதிகரித்துள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.100-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.106-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
News November 9, 2025
பரமத்தி வேலூர் அருகே வசமாக சிக்கிய 2 பெண்கள்!

ப.வேலுார்: பொத்தனுார், சக்ரா நகரில் 2 பெண்கள் முதியோர் இல்லம் நடத்துவதாக கூறி, பண உதவி செய்யுமாறு வீடு வீடாக பணம் வசூலித்துள்ளனர். அப்போது அங்கிருந்து ஒரு வீட்டில் செல்போன், பணம் காணாமல் போயுள்ளது. அந்த வீட்டை சேர்ந்தவர் அவர்களை தேடியபோது தப்பி ஓட முயன்றனர். அவர்களை பிடித்து ப.வேலுார் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், முதியோர் இல்லம் நடத்துவதாக கூறி வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.


