News October 29, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 535 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 540 காசுகளாக அதிகரித்து உள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.101-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.110-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை

Similar News

News October 30, 2025

நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று (அக். 29) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (அக். 30) முதல் முட்டையின் விலை ரூ.5.40 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

News October 30, 2025

நாமக்கல்லில் புதிய சித்த மருத்துவமனை திறப்பு விழா

image

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் மாநகராட்சியில் அமைந்த அரசு மருத்துவமனை வளாகம் தற்சமயம் செயல்பாட்டில் இல்லாமல் இருந்து வருகிறது. இந்த பழைய அரசு மருத்துவமனை வளாகத்தை 68 படுகை வசதிகள் கொண்ட புதிய சித்த மருத்துவமனையாக மாற்றும் பணி தற்சமயம் நடைபெற்று வருகிறது. இந்த புதிய சித்த மருத்துவமனையின் திறப்பு விழா வருகின்ற நவம்பர் 2 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

News October 30, 2025

நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.29 நாமக்கல்-( தங்கராஜ் – 9498170895) ,வேலூர் -(ரவி – 9498168482), ராசிபுரம் -(கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் -(செல்வராஜு – 9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!