News August 17, 2025
நாமக்கல்லில் கறிக்கோழி விலை திடீரென சரிவு

நாமக்கல் மண்டலத்தில் நேற்று மாலை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முட்டை விலை 4.90 காசுகளாகவும், ஒரு கிலோ முட்டை கோழி 97 ரூபாய்க்கும், கறிக்கோழி ஒரு கிலோ 95 ரூபாய்க்கும், விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. என கோழி பண்ணையாளர்கள் தலைவர் சிங்கராஜ் தெரிவித்தார்.
Similar News
News August 17, 2025
கிட்னி விற்பனையை தொடர்ந்து கல்லீரல் விற்பனை

பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி கிட்னி விற்பனை நடைபெறுவதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில், இது குறித்து மருத்துவத்துறையினர் விசாரித்து வருகின்றனர் .இந்நிலையில் பள்ளிபாளையம் அலமேடு பகுதியில் உள்ள பெண் தொழிலாளி பேபி என்பவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் 8 லட்ச ரூபாய் பணத்திற்காக தனது கல்லீரலை விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News August 17, 2025
நாமக்கல்: பதிவு செய்தால் பணம் கிடைக்கும்!

நாமக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு 10th தேர்ச்சி பெறாதவர்கள், பெற்றவர்கள், மேல்நிலை வகுப்பு, பட்டதாரிகள், படித்த மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். தகுதியானோர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04286222260 தொடர்பு கொள்ளலாம். யாருக்காவது பயன்தரும் SHARE பண்ணுங்க!
News August 17, 2025
நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு

நாமக்கலில் இன்று ஆகஸ்ட் 17ஆம் தேதி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது மழை குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இதன் காரணமாக முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.95 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது நேற்று ஆகஸ்ட் 16ந் தேதி இதன் விலை ரூ.4.90 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது