News April 29, 2025

நாமக்கல்லில் கத்தியுடன் சுற்றிய 4 பேர் கைது

image

நாமக்கல்: பலப்பட்டரை மாரியம்மன் கோயில் அருகே நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட இருந்த போது காரில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த பள்ளி காலனியை சேர்ந்த அஜய் பிரபாகர் (26), லோகேஸ்வரன் (32), குணசேகரன் (48), கிருபாகரன் (32) ஆகிய 4 பேரை கைது செய்தனர். விசாரணையில், மனைவியின் உறவினர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குணசேகரன் கத்தியுடன் சுற்றித்திரிந்தது தெரியவந்தது.

Similar News

News April 29, 2025

Myv3இல் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவரா நீங்கள்?

image

விளம்பரம் பார்த்தால் பணத்தை அள்ளலாம் என கூறி Myv3 ads நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காமல் ஏமாந்தவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொருளாதர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். பணம் முதலீடு செய்ததற்கான அசல்ஆவணங்களுடன் நேரில் வந்துபுகார் அளிக்க வேண்டும். நாமக்கல்லில் யாராவது ஏமாந்திருந்தால் SHARE பண்ணுங்க.

News April 28, 2025

நாமக்கல்: முட்டை விலை 10 பைசா உயர்வு!

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப் 28) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.30 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது.

News April 28, 2025

நாமக்கல்: கறிக்கோழி விலையில் மாற்றம் இல்லை

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த (ஏப்.25) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.8 உயர்த்தப்பட்டு ஒரு கிலோ ரூ.88 நிர்ணயிக்கப்பட்டது. இன்று (ஏப்-28) நடைபெற்ற கூட்டத்தில் கறிக்கோழி விலை மாற்றம் செய்யவில்லை. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

error: Content is protected !!