News September 16, 2024

நாமக்கல்லில் ஒரே நாளில் 314 மனுக்கள்

image

நாமக்கல்லில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி 314 மனுக்களை மாவட்ட ஆட்சியர் உமாவிடம் பொதுமக்கள் வழங்கினர். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கைக்கு பரிந்துரைத்தார்.

Similar News

News November 14, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு !

image

நாமக்கலில் இருந்து நாளை (நவம்பர்.15) திருப்பதி, கர்னூல், ஹைதரபாத் போன்ற பகுதிகளுக்கு செல்ல 16733 ராமேஸ்வரம் – ஓகா விரைவு ரயில், காலை 4:30 மணிக்கும், 16354 நாகர்கோவில் – காச்சிகுடா விரைவு ரயில் மாலை 5:40 மணிக்கும் செல்வதால், நாமக்கல் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் முன் பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

News November 14, 2025

நாமக்கல்: சூப்பர் அரசு வேலை நல்ல சம்பளம்! APPLY NOW

image

மத்திய அரசு புலனாய்வுத்துறையில் உதவி மத்திய புலனாய்வு அதிகாரி பதவியில் 258 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு கல்வித்தகுதி BE, ME போதும். ஊதியம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி நவ.16 ஆகும். இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

News November 14, 2025

நாமக்கல் விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

image

நாமக்கல்லில் சிறப்பு பருவ பயிர்களான நெல்-II (ம) சிறிய வெங்காயம்-II சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ, கூட்டுறவு கடன் சங்கங்களிலோ, பொது சேவை மையங்களிலோ பிரீமியத் தொகையாக, நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.567.61-ம், சிறிய வெங்காயத்திற்கு ரூ.2087.16-ம் செலுத்தி காப்பீடு செய்யலாம். காப்பீடு செய்ய கடைசி தேதி: நெற்பயிருக்கு டிச.16 (ம) சிறிய வெங்காயம் பயிருக்கு டிச.01 ஆகும்

error: Content is protected !!