News February 24, 2025

நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 24ஆம் தேதி நடைபெற்றது இந்த குழுக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ 4.90 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டது வெயில் குளிர் பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இதனிடையே ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ4.90 என்ற அளவில் நீடிக்கிறது

Similar News

News August 13, 2025

தங்க கவசத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்!

image

நாமக்கல் கோட்டை சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில், ஆடி மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 13) ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, ஆஞ்சநேயர் சுவாமிக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News August 13, 2025

நாமக்கல் முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 485 காசுகளாக இருந்து வந்த நிலையில், இதற்கிடையே நேற்று(ஆக.12) நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 490 காசுகளாக அதிகரித்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

News August 13, 2025

நாமக்கல்: கறிக்கோழி விலை உயர்வு!

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.85-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று(ஆக.12) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.7 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக் கோழி விலை கிலோ ரூ.92 ஆக அதிகரித்து உள்ளது. அதன்படி, முட்டைக்கோழி கிலோ ரூ.107-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

error: Content is protected !!